Sunday, January 15, 2012

சில நிகழவுகள் சிற் சில பகிர்வுகள் :4 (15/01/2012)


நண்பன் : 
   நேற்று தான் பெங்களூர் ஊர்வசி தியேட்டர்ல பார்த்தேன் . வியாழன் காலைல கார்கி படம் அட்டகாசம்னு சொன்னதுல இருந்தே ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருந்து . 3 idiots ஏற்கனவே 2 தடவை பார்த்தது நாலா ட்விஸ்ட் எதுவும் சுவாரசியமா இல்ல , ஆனாலும் விஜய், ஷங்கர் காக பார்க்கணும்னு தோனுச்சு. சீன் பி சீன் ஷங்கர் அப்படியே எடுத்து இருக்காரு, பாட்ட தவிர . போக்கிரி வந்தப்போ எல்லாரும் விஜய் மகேஷ்பாபுவ அப்படியே காபி அடிச்சு நடிச்சு இருக்காருன்னு சொன்னங்க , அதுக்காகவே அமிரோட பாதிப்பு இல்லாம நடிச்சு இருக்காரு . படத்தோட டைட்டில் கீ  போர்ட்ல இருக்குற ஸ்பெஷல் கேரக்டர்ஸ வச்சே டிசைன் பண்ணி இருக்காங்க . நண்பனோட கேரக்டர் ரெம்ப ஸ்பெஷல் நு சிம்போலிக்கா சொல்லுரன்களோ .

                  விஜயோட சேர்த்து சத்யனும் , ஜீவாவும் கலக்கி இருந்தாங்க . ஆசிரியர் தின மேடைல சத்யன் கொடுக்குற மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற பேச்சுக்கு தியேட்டர் ல  நல்ல வரவேற்பு .  கார்கி   சிறந்த பாடல் ஆசிரியர் மட்டும் இல்ல நல்ல வசனகர்தாணு நிருபிச்ச படம் .மனுஷன் அண்ணா பலகலை கழகத்துல வேலை பார்த்து கிட்டே, பாட்டும் எழுதி , சாப்ட்வேர் கம்பனியும் நடத்தி , இப்போ வசனமும் எழுத அரம்பிசுடறு . சுஜாதாவுக்கு பிறகு பல துறைகளில் தடம்  பதித்து    பெற வாய்ப்பு உள்ளவர்  என்றே தோன்றுகின்றது . கார்கி வசனங்கள்ல கூட சுஜாதா வோட பாதிப்பு சில இடங்களில் இருந்துச்சு . இனி மணிரத்னமும் கர்கியவே பயன் படுத்திக்கலாம் , இளைஞர் கள் நாடி துடிப்பு தெரிஞ்சு வசனம் எழுதி இருக்காரு . உதாரணம் : கக்கா  போறதா டவுன்லோட் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லுறது , நீ குசு போட்டே ஒசான் ல ஓட்டை விழுந்திடுசுனு சொலுறது .

                    ஆளும்கட்சி பிரஷர் ல விஜய படத்த விட்டே நீக்கிட்டாங்க , சூர்யா நடிகிறாரு நு நெறைய வதந்தி. எல்லாத்தையும் மீறி மொத டீமும் ஜெயுச்சு இருகாங்க . வழக்கம் போல நம்ம கேபிள் அண்ணனுக்கு மட்டும் பூத கண்ணாடி வச்சு விஜய் படத்துல  இருக்குற குறைகள கண்டுபிடிசுறாரு .இவராவது பரவாயில்ல  , ஜாக்கி, விஜய் படத்துக்கு விமர்சனமே எழுத மட்டாரு. ரீமேக் படம், விஜய் படத்துல எல்லார் கிட்டயும் அடி வாங்குறாரு ,ஜீவா அக்டிங் சூப்பர் இப்படி சொல்லியே அஜித் ரசிகர்கள் மனச தேத்துகிரங்க .  வேட்டை நல்ல இலைன்னு வர்ற விமர்சனம்களும் நண்பனுக்கும் பெரிய பிளஸ் . நண்பன தெலுங்குல டப் பண்ணி ரிலீஸ் பண்ணறாங்க . விஜய்க்கு அந்திரவுலையும்  நல்ல ஓபனிங் கிடைக்கும்னு நம்பலாம் . தெலுங்குல நிலையான மார்கெட்ட பிடிகிரதுக்காகவே ஷங்கர்,முருகதாஸ் , கௌதம் மேனன்  படத்துல நடிக ஒத்து கிட்டரு போல தளபதி .
நல்ல நண்பன் - எல்லாம் நலமா  இருந்தும் இந்த மாதிரி விமர்சனம்கல தவிர்க்க முடியாது தான் http://www.cineclouds.com/2012/01/blog-post_14.html.எல்லாம் விஜயோட முன் வினை (குருவி , சுறா e.t.c)


இது அஜித் ரசிகர்கள் காக :


சொந்தம்கிறது தங்கம் மாதிரி 

தங்கம்கிறது அனுஷ்க மாதிரியா ?


மிச்சத பார்காம  மச்சத பார்த்தவங்க மச்சகரங்க !!
எங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு நாங்க போட்ட கோலம்  , ராத்திரி ஏழு மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு பதினோரு மணிக்கு முடிச்சோம் 


சுவாரஸ்யமான   சுட்ட ட்வீட்ஸ் :

கிளார்க்:எண்ணி மூனே நாளில் உங்களை முடிக்குறோம்
டோனி:ஹ ஹா கண்ணா அங்கே பாரு எண்ணி மூனே நிமிஷத்துல நாங்களே முடிசிக்குறோம்

பொங்கல் பொங்கினா அதில் கொஞ்சம் மிக்சரை அள்ளிபோடுங்க பொங்காது#கேப்டனின் பொங்கல் வாழ்த்துசெய்தி

டேய் தோனி &கோ பசங்களா!! ஆடாம ஜெயிக்க நீங்க அஜித்& கோ இல்லை.. ஒழுங்கா ஆடுங்க

தாவணில அமலாபால்.... #செம வேட்டை

சிட்டியில் இருப்போர் சப்பிப்போட்ட பனங்கொட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை - நண்பனில் இலியானாவை பாருங்கள்.
வெளங்கிடும்.. அடுத்தது கென்யா'வையோ, நமீபியா'வையோ கூப்ட்டு ஒரு வெளுவெளுத்தாத்தான் என் மனசு ஆறும் :-(((
இந்த போகி பொங்கலுக்காவது நீயா? நானா? கோபிநாத் தனது பழைய கோட்டுசூட்டுகளை தீவைத்து கொளுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.!
சென்னையில் புகைமூட்டம். விமானங்கள் ரத்து #தல ரசிகர்கள்,வயிற்றெரிச்சலை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆ.விகடன்: ''மிஸ் பண்ணிட்டோமே... நாம நடிச்சிருக்கலாமே’னு நீங்க நினைச்ச படம் எது?'' 
பவர்ஸ்டார்: ''எந்திரன்!''
ஆண்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு; வீட்டு வாசப்படி தான் அது, வெளிய வந்துட்டா நாம சிங்கம்ல.!!! :)
கடைக்கு அடிக்கடி அனுப்பறதுக்காகவே வீட்ல கடைசியா பிறந்தவங்களை கடைக்குட்டி னு கூப்பிடறாங்க போல..! 


இது நான் எழுதும் ஆர்வத்தில் எடுத்த முயற்சி, பிழைகள் இருந்தால் பொருது அருள்க. வாசித்தமைக்கு மிக்க நன்றி.பிடித்து இருந்தால் udanz, Indli யில்  வாக்களிக்கவும்

3 comments:

Minmalar said...

//அதுக்காகவே அமிரோட பாதிப்பு இல்லாம நடிச்சு இருக்காரு//
காமெடி பண்ணாதீங்க பாஸ்!

வித்யாதாசன் said...

//அதுக்காகவே அமிரோட பாதிப்பு இல்லாம நடிச்சு இருக்காரு//
காமெடி பண்ணாதீங்க பாஸ்!
குடிகாரன் திருந்தினதுக்கு அப்புறம் கூட நி குடிக்க தான் செய்வென்னு சொல்லுர மாதிரி இருக்கு :)

Anbazhagan Ramalingam said...

nallaruku boss. plz continue ur posts