Monday, January 7, 2013

சில நிகழவுகள் சிற் சில பகிர்வுகள் :5 (06/01/2013)
வாசிகிறதுக்கும்  பெரிசா ஆள் இல்ல, எழுதுறதுக்கும் நேரம் இல்ல .ஆனாலும் ஒரு சின்ன ஊந்துதலால் திரும்ப எழுதனும்னு தோனுச்சு.நன்றி முகம் தெரியா நண்பர் Anbazhagan Ramalingam (http://www.blogger.com/comment.g?logID=3736474286203184091&postID=4836370577718931940)
முரண் :
விகடன்ல வாலியோட கேள்வி பதில்கல்ல ஒரு தடவை பழனி பாரதியோட காற்றின் கையெழுத்து பத்தி சொல்லும் போது "என் நரம்புகளை மீட்டது "(அவரு இங்கிலிஷ்ல இதே அர்த்ததுல எதோ சொல்லி இருந்தாரு). அதுக்காகவே போன மாசம் நடந்த பெங்களுரு புத்தக கண்காட்சில வாங்கினேன். கருப்பு நிற பற்றிய தாழ்வு மனப்பான்மை , அரவாணிகளுக்கு சமுகத்தில் மரியாதை ,மும்பை குண்டு வெடிப்பு ,பெண்களுக்கு சம உரிமை, மாதிரி சமுக பிரச்சனைகளை பற்றி வார வாரம் கும்குமத்தில் வந்த "கும் கும் " கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம் . பாடலாசிரியர் கட்டுரைகள் எல்லாமே கலக்கல் தான் . ஆனா அதுல நெருடலான விசயமே ஒரு கட்டுரைய பத்தி தான் . முக நூல் முலமா ஒரு பெண்ணோட ஆபாசமா CHAT செய்த  ஒரு எழுத்தாளர்  வெளாசி  இருக்காரு... அதுக்கு என்ன இப்போ ?
ப.பாரதி  யாருக்கு புத்தி சொன்னாரோ  அவரே இந்த புத்தகத்து முன் அட்டைல இத புத்தகத்த புகழ்ந்து இருக்காரு.
கீழ snapshot:

 
குழப்பம்  1: ச.நி இந்த புத்தகத்த படிக்கல . படிக்காமலே எல்லாருக்கும் recommend பண்றாரு
குழப்பம்  2: ச.நி க்கு இந்த புக் க குடுக்கும் போது அந்த கட்டுரைய மட்டும் கிழிச்சுட்டு குடுத்துட்டாங்க 
குழப்பம்  3: தன்னை பத்தி வந்த கட்டுரையா நல்ல படிச்சுட்டு பெருந்தன்மைய எடுதுகிட்டாரு (சான்ஸ் இல்ல ஆனா வாய்ப்பு இருக்கு )

LTTE-Deccan Herald
நேத்து உடல் நல குறைவு காரணமா அப்போலோ ஆஸ்பத்ரியில டாக்டர் காக காத்துகிட்டு இருந்தப்போ நேத்து  டெக்கான் ஹெரல்ட் பேப்பர் ஆ மேஞ்சு  கிட்டு இருந்தேன். விகடனில் மட்டுமே ஈழம் பற்றிய செய்திகளை வசிக்கும் எனக்கு முதல் தடவை யா LTTE  பற்றி எதிர் மறையான செய்தி இருந்துச்சு .

செய்தியின் சாராம்சம்:
தற்போது மனம் திருந்திய (?) ஒரு பெண் புலி, ஈழம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தான் (தாங்கள் ) வாழ்ந்த வாழ்க்கையை விவரித்து உள்ளார். படிக்கும் சிறார்களை வலுகட்டயமாக(சேரமாட்டோம் என்று அவர்கள் கதறி அழுதார்களாம்  )  புலிகள் போரில் ஈடுபடுத்தியது , புலிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை காணமல் பெற்றோர்கள் தவித்தது , போர்களத்தில் போதிய உணவு மருந்து வசதி இல்லாதது  போன்ற அனுபவங்கள் பகிரப்பட்டு இருந்தது. இந்த செய்தியில் உள்ள விஷயங்களின் உண்மையின் சதவிகிதம் ஆராய பட வேண்டிய ஒன்றே . ஆனால் இதை, இது போன்ற செய்திகளை படிக்கும் மற்ற மாநிலத்தவர்கள் LTTE பற்றியும் தமிழர்கள் பற்றியும் தவறான அபிப்ராயம் ஏற்பட அனேக வாய்ப்புகள் உள்ளது . மேதகு பிரபாகரன் இறந்த அன்று என்னுடன் பணிபுரியும் கறுத்து தடித்த குல்டி குண்டு பிகர் "நமது பிரதமரை கொன்றவர்கள் அல்லவா , இது சரியான தண்டனையே" என்றார். மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் நான் ஒதுங்கி கொண்டேன். இது போன்ற செய்திகளே அவர்களின் சிந்தனை கான  காரணிகள். சுட்டி கிழே 
http://www.deccanherald.com/content/302937/ltte-women-cadre-now-path.html


DTH ரூபம் :
Airtel ல மட்டும்   30 லட்சம் முன்பதிவு - 30 x 1000 = 300 கோடின்னு எல்லாம் ஒரு ப்ரூட கணக்கு இணையத்துல சுத்தி கிட்டு இருக்கு . இது உண்மை இல்லைனாலும் , DTH  முன்பதிவு  மூலமா கமலஹாசன் கணிசமாக சம்பாதித்து என்னவோ உண்மை. இந்த முயற்சி ஓரளவுக்கேனும் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் , இதை பின்பற்றி பெரிய அறுவடை செய்ய காத்து இருப்பவர் கோச்சடையான் .
உதாரணம் : ஆளவந்தானுக்கு உபயோகித்து தோல்வி அடைந்த ராக்கெட் மார்க்கெட்டிங் (நிறைய திரை அரங்குகளில் படத்தை வெளியிடுவது) சிவாஜிக்கு கை கொடுத்தது . ஆனாலும் ஒரு சாமானியனுக்கு 1000 ரூபாய் சற்று அதிகமே . DTH  இல் வெளியிடுவதால் படத்தை தியேட்டரில் வெளியிட மறுக்கும் திரை அதிபர்களின் செயல் நியாயம் என்றால் , கீழ் கண்ட செயல்களும் நியாயமே 
(1) வால் மார்ட் இடம்  உணவு பொருள் விற்பவர்களிடம் , அண்ணாச்சி கடைகளில் பொருட்கள் கொள்முதல் செய்ய  பட மாட்டாது 
(2)  blogspot இல் எழுதும் எழுத்தாளர்களின் பத்திகள் இனி பத்திரிகைகளில் இடம் பெறாது (அதிஷா, யுவா  கவனிக்க )
 இதுக்கு மேல எதுவும் தோணல , வாசிக்கிற நண்பர்கள் உங்கள் யோசனையை பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம் 

ரௌத்திரம் பழகும் தரித்திரமமே :
      இன்று மாலை குடும்பத்துடன் ஜெயநகர் சென்று திரும்பும் வழியில் ஒரூ சிக்னலில் என் இருசக்கர வாகனத்தில் பச்சைஅப்பனுகாக  காத்து கொண்டு இருந்தேன். என் அருகில் scootypep இல் வந்த ஒரு பெண் முன்னால் நின்ற ஒரு முதியவரை விலக சொல்லி தொடர்ந்து ஹோர்ன் அடித்து கொண்டு இருந்தால். முதியவர் தன் எடது பக்கம் திரும்பி "No free left turn" போர்டை காண்பித்து வலி விட மறுத்தார் . சும்மா விடுவாள சுத்திரகாரி , இரண்டு அருமை யான ஆங்கில வார்த்தைகளை அம் முதியவரின் மேல்  பிரயோகித்தால் 
"FUCK "
"GO TO HELL"
   தலை குனிந்த முதியவர் அவமானத்தை தாங்கி கொண்டாலும் வழி விட மறுத்தார். கதை இதோடு முடிய வில்லை 
"ஹலோ மேடம்" என்று ஒரு குரல் பின்னல் இருந்து 
 ஒரு டிராபிக் போலீஸ் ஆட்டோவில் அமர்ந்து இருந்தார். பிறகு என்ன அந்த பெண்ணும் தன் ஹெல்மெட்டை மாட்டி கொண்டு சிக்னல்   Count Down எண்ண ஆரம்பித்தாள்  .
எழுத்து பிழைகளை பொருத்து கொண்டு தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் தெரிவிப்பவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்