பெங்களுரு நகரின் அமைதியான சாலைகளை , பின்னல் நின்று முண்டி அடிக்காமல் உணவகங்களில் உன்ன விரும்புபவர்கள் , இன்ன பிற விசயங்களை ரசிக்க விரும்பும் அமைதி பிரியர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. மூன்று நாட்கள் விடுமுறையை ஒட்டி நெரிசல் இல்ல அமைதி தொழில் நுட்ப பூங்காவாக மாறி இருக்கின்றது. சிறிய இடைவேளைக்கு பிறகு வந்து இருக்கும் விடுமுறை என்பதால் பெரும்பான்மையானோர் சொந்த ஊர் பயணம் மேற் கொண்டு இருப்பார்கள் போலும்.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் தொடர்ச்சியாக அங்குள்ள இளைஞ்சர்களின் கோபம் அங்கு உள்ள மென் பொருள் தொழில் நிறுவனங்களின் பக்கம் திரும்பி உள்ளது . இன்றைய நிலவரப்படி ஆறில் ஒரு அமெரிக்கர் வேலை இல்லாமல் இருபதாக ஓர் புள்ளி விவரம் கூறுகின்றது . அங்குள்ள இளைஞ்சர்கள் தாங்கள் நாட்டின் பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு இவ்வளவு நாட்களாக கொடுத்த வேலைகளை , இனி தமக்கே தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிடம் வேலையை பகிரா விட்டால் , ஏற்படும் அதிக படியான செலவினங்களை சமாளிக்க வேண்டும், பகிர்ந்தால் உள்ளூர் எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் தவிக்கின்றன நிறுவனங்கள். துணுக்கு : தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் கையிருப்பை விட ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள கையிருப்பு அதிகம் .
சென்ற ஆ.தி.மு.க ஆட்சியில் அரசங்கமே போட்ட மேம்பால ஊழல் வழக்குகள் மக்களிடம் இது ஒரு பழிவாங்கும் செயல் என்கிற எண்ணத்தை உருவகியதல் இந்த முறை மக்களிடமே குற்ற அதரங்களை திரட்டும் புதிய முறை செம்ம ஹிட்டு . இவை அனைத்தும் பலி வாங்கும் செயல்கள் என்றாலும் ஒரு சில வழக்கள் மட்டுமே ஜோடிக்க பட்டவை மற்ற அனைத்தும் பொது மக்களிடம் புகார்களாக பெற பட்டு , அதன் மீதே நடவடிக்கைகள் எடுக்க படுகின்றன . எதிர் கட்சி என்கிற அந்தஸ்தை பறி கொடுத்து , அழும் கட்சியை பற்றி விமர்சிக்க முடியாமல் , ஒவ்வொரு ஊரின் சிறைச்சாலைகளுக்கு விசிட் அடித்து கொண்டு இருகின்ரார தளபதி . துணுக்கு : ஆடி அடங்கும் வாழ்க்கை.....................
மங்கத்தவில் அஜித்தின் நரைத்த முடி கெட்டப் அட்டகாசம் . திரைலோரில் வரும் பின்னணி இசை ஈர்த்த அளவிற்கு , பாடல்களில் ஏதும் ஸ்பெஷல் இல்லை, பில்லாவை விட ஒரு படி மேலே இருக்கிறது தீம் மியூசிக்."நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது !" பைனல் டச் டயலாக் சூப்பர் . இதையே பரிசல் கொஞ்சம் மாத்தி இப்படி ட்வீட் பண்ணி ருக்கரு "நானும் எவ்ளோநாள்தான் நம்பர் ஒன் -னாவே இருக்கறது? #தோனிடா". ஒன்றரை வருடங்கள் கழித்து வரும் அஜித்தின் 50 படம் என்பதால் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு நிகழ்கிறது .வரலாறுக்கு பிறகு ஒரு நேர்மையான ஹிட் அஜித்துக்கு இல்லை . பில்லா மெகா ஹிட் என்றாலும் படம் பெரிதா ஈர்க்க வில்லை. அஜித் படம் மட்டும் எவ்வளவு மொக்கைய இருந்தாலும் ஆஹா ஓகோனு இருக்குனு மௌத் டாக் குடுகுரதுக்குனே ஒரு பெரிய கூட்டம் இருக்கு . அடுத்த வாரம் மங்கதா படம் வெளியாகும் தேதி அறிவிக்க பட உள்ளது . நம்ம வலை உலகத்துலே கூட ஏகன் வந்தப்ப அமைதியா இருந்துட்டு வில்லு வந்தப்ப பய புள்ளைங்க கிளி கிளின்னு கிளுசுட்டாங்க. ஆனா நம்ம தளபதி அதுக்கெல்லாம் அஞ்சாம மறுபடியும் சுறா கொடுத்தது தனி கதை .ALL THE BEST VINAYAK .
துணுக்கு :இதுக்கு இடையில் மதுரைல போலீஸ் மங்கதா போஸ்டர கிளிசுட்டங்கனு தயாநிதி தனிய கூவி கிட்டு இருக்காரு ( என்ன ஆட்டம் பொட்டீங்க டா) மங்கதா ட்வீட்ஸ் :
பில்லா படத்துல மாட்டின கோட்டை இன்னுமா கழட்டல..! #மங்காத்தா டிரைலர்
துணுக்கு 1: தெய்வ திருமகள் வசூல் காஞ்சனாவ விட கம்மியம் . துணுக்கு 2:எங்க ஆபீஸ்ல கன்னட காரங்க நெறைய பேரு இந்த பின்னணி இசைய தான் அழைப்பு ஒலி யா (Ring Tone) வச்சு இருக்காங்க
கடி ஜோக் : "கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."
இந்த பதிவு புடிச்சவுங்க மட்டும் இல்ல படிச்சவிங்களும் ஒட்டு போடலாம் . தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் குறிப்பிடவும் . வருகைக்கு நன்றி .
விஜயகாந்த் அய்யா அம்மா என்ன செஞ்சாலும் அடக்கி வாசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரு போல, சமசீர் கல்வில இருந்து எல்லாத்துக்கும் நல்லாவே ஜால்ரா போடுறாரு . ஆனா வைகோ மாதிரி ரெம்ப சத்தம் வராம ஜால்ரா போடுறாரு . ஆனலபட்ட 3 பொண்டாட்டி தலைவர் கட்சியே ஆடி போய் இருக்கும் பொது நாமல்லாம் எம் மதிரம்னு நெனச்சு இருக்கலாம் . இல்லேன்னா கிடைத்த 5 வருசத்துல ஆளும்கட்சிய பகைக்காம டாஸ்மாக் , கேப்டன் டிவி , குவாரி மணல்னு சம்பாதிக்கலாம்னு முடிவு பண்ணி இருப்பாரு . அனா விதிய பார்த்தீங்களா , கேப்டன் எந்த படத்துலயும் எதிர் கட்சி தலைவர நடிகல , ஒரு வேலை நடிச்சிருந்த படத்துல நடிச்ச முதல்வர வாங்கு வாங்குனு வங்கி இருப்பாரு( அங்க யாவது ) .கவுண்டமணி அண்ணன் திரும்ப நடிக வராத ஒரு பேச்சு உலாவி கிட்டு இருக்கு, அப்படி நடிச்ச அவருக்காக அவரோட ஒரு ரீமேக் டயலாக் இருக்கு " என்னடா மம்மிய பார்த்த எதிர் கட்சி தலைவர் மாதிரி பம்மி கிட்டு இருக்க :) ".எது எப்படியோ வடிவேலு பிரச்சரதுல சொன்னது நாடகள , ஆன அவரு படத்தோட பஞ்ச் டயலாக் உண்மை ஆயிடுச்சு , என்னனு கேக்றீங்கள கருப்பும் செவப்பும் சேர்ந்து நாட்ட ஆண்டு கிட்டு இருக்கு .
TWITTER அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. ஆள் ஆளுக்கு உதிர்குற தத்துவத்துல ஜென் னையே மிஞ்சிடுவாங்க போல . அதுலயும் குச்சு ட்வீட்ஸ் கலக்கல் போங்க. யாரு குஜ்ஜுனு தெரியலையா, இவர புடிங்க @iamkarki . அதுவும் கடந்த வாரம் உதயநிதி தர வேற்றிய 7 அம் அறிவு படம் எல்லாம் அதகளம். சம்பில்லுகு சில. அப்புறம் டவிட்டேர்ல நம்ம கவிபேரரசு வைரமுத்து இணைத்து இருக்காரு, ஆக்க பூர்வமான எதிர் பார்க்கலாம் , பாலலோ பன்னுரவுங்களுக்க ID @PoetVM
சுவாரஸ்யமான சுட்ட ட்வீட்ஸ் :
பெண்களின் கைகள் ஒரு சேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ அருகிலிருக்கும் பெண் தேர்வு செய்யும் சேலையில்தான்.
ஒரு நல்ல நண்பன் சந்தித்துவிட்டு போவான், உண்மையான நண்பன் பக்கத்துக்கு அறையில் இருப்பான் - நண்பர்கள்தின செய்திகளுக்காக திகாரிலிருந்து ஆ.ராசா
Notice Board in a conference meeting : "KEEP YOUR CELL PHONE IN MANMOHAN SINGH MODE"
விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு
வாழ்வின் ஆதாரத்தேவையான ரசனையோடு அழகை ரசிச்சு அத சொல்ல வந்தா ஈவ் டீசிங்க்ன்னு கத்துறவங்க indescent பப்ளிக்
இனிப்பும் காரமும் சேர்ந்தவள்தான் பெண்... விஸ்கியும் ஐஸ்சும் சேர்ந்தவன்தான் ஆண்.... #அரிய கண்டுபிடிப்பு
100 சவரன் நகையுடன் புதுப்பெண் ஓட்டம் # எது தேவையோ அதுவே தர்மம்?
கடவுளுக்கு மனிதர்கள் மீது அன்பு உண்டென்பது அனுஷ்கா,அசின் , அமல பால் போன்ற்வர்களையும் படைக்கும்போதுதான் தெரிகிறது
வீட்டில் பெண்பார்க்க தொடங்கிய உடன் சமையல் கிளாஸ், தற்காப்பு கலை, தி.நகர் என போகிறவன் தான் நல்ல மாப்பிள்ளை
சுற்றியிருப்பவர்களிடம் நம் மீதான மரியாதை கூடும் போது தான் சட்டென புலப்படுகிறது நாம் இப்போ யூத் இல்லன்னு
'என்னை யாராலும் அழிக்க முடியாது' என 'மு.க'வையும், 'ஜெ'வையும் பார்த்து சிட்டி ரோபோ போல் சிரிக்கக்கூடிய தகுதி டாஸ்மாக்குக்கு மட்டுமே உண்டு.
நகைச்சுவை நடிகர் தங்கவேலுவிற்கும் தலைவர் தங்கபாலுவிற்கும் இடையே அந்த ஒரு எழுத்து வித்தியாசத்தை தவிர வேறு எதுவும் பெரியதாய் இல்லை.
விரைவில் சிறைநிரப்பும் போராட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு! #அவராண்ட யாராச்சும் சொல்லுங்கப்பா புரட்சித்தலைவி ஏற்கனவே அதை ஆரம்பிச்சிட்டாங்கனு!
வேலை செய்யுற நேரம் தூக்கமா வருது... சரி தூங்கலாம்னு போய் படுத்தா ஏதாவது வேலை செய்யலாம்னு தோணுது... #என்ன கொடும சார் இது...
பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு # வெளியே பிடிவாரண்ட்டுடன் போலீஸ் நின்றதால் உடனே உள்நடப்பு! ----------------------------------------------------------------------------
காஞ்சனா சக்க போடு போடுது போல, அதுலயும் தெலுங்குல கண்ணா பின்ன ஹிட்டம்ல . இந்த மாதிரி மொக்க படம் ( நான் இன்னும் பார்க்கால , எல்லாம் போஸ்டர் ட்ரைலர் பார்த்து ஒரு கணிப்பு தான்) எல்லாம் நல்லா ஓடுன, அரண்ய காண்டம் எல்லாம் ரெண்டே நாள்ள தியேட்டர விட்டு தூக்க தான் செய்வாங்க , அப்புறம் வேற வலி இல்லாம பார்க்காத வுங்க எல்லாரும் டவுன்லோட் பண்ணி தான் பார்க்கணும் . லாரன்சுக்கு நேரம் நல்லா தான் இருக்கு போல .
அரவாணிகள் எல்லாம் தியேட்டர்ல சரத் எம் எல் ஏ அய்யகு அரத்தி எடுக்கு ராங்கலம்ல
திரும்பவும் பொருளாதார சரிவுனு ஒரு குண்ட போடுறாங்க . ஒரு பொது பயத்துல updationa அரம்பிச்சசு . அக்டோபர் அப்ப்ரைசல்ல மெரட்டலாம்னு நெனச்சவன , அரண்டு தெறிக்க வச்சுட்டாங்க . கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே ரெண்டு , மூன்று வேலை மாறியவர்கள் உண்டு , எல்லாம் நம்ம சூர்யா வோட technique தான் . மார்க்கெட் இருக்கும் போதே கல்லா காட்டனும்ல ."சாவு பயத்த திரும்ப காட்டிடன்களே பரமா".
நம்ம தல திராவிட்ட ஒரு நாள் அணியில சேர்க்கும் போதே நெனச்சேன் , ஏதோ உள் குத்து இருக்கேன்னு , நெனச்ச மாதிரியா பணி ஒய்வு ஒப்ந்ததொட சேர்த்து இருகாங்க . எப்பேர்பட்ட தெறம சாலிய கேப்டன் ஆகி மொத்தமா காலி பண்ணிட்டாங்க , மனுஷன் பெரிய பொறுமை சாலி தான் , எதுக்குமே ஆசாரம இங்கிலான்ட்ல அடிச்சு பட்டய கெளப்பி இருக்காரே . WE WILL MISS YOU DRAVID.
தெய்வ திருமகள் படம் டைரக்டர் விஜயால் அனுமதியின்றி தழுவல் செய்யப்பட்டது என்பதையும், இதை அவர் ஒத்துகொள்ள வில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே, இதை கண்டிக்கும் விதமாக சில பதிவர்கள் இதை பற்றிய விவரத்தை "I am sam " படகுலுவிற்கு அனுப்பி உள்ளனர் . இதற்கு அவர்கள்தரும் காரணம் இனி வரும் காலத்தில் இது போன்ற திருட்டு தழுவல்களை தடுக்கும் முயற்சி என்று கூறி உள்ளனர். இது வாதத்திற்கும் சரி அக இருந்தாலும் , என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை . காரணம் தெய்வ திருமகளின் வெற்றிக்கு கதையையோ அல்லது திரை கதையோ காரணம் அல்ல, அதை சுவாரிசயமாக, ஜனரஞ்சமாக படைத்த விதத்தில் இயக்குனர் விஜய் வெற்றி பெற்று உள்ளார் . மேலும் அனுமதி பெறத்தான் காரணம் , இதை வாங்குவதற்கு அகும் செலவு என்பது மிக பெரிய தொகைக இருக்கும் என்பதே. இதே காரணத்தால் தான் நம்மை விட பெரிய வியாபார சந்தை உள்ள ஹிந்தி மொழி படங்களே அனுமதி பெறாமல் ஹாலிவுட் படங்களை சுடுகின்றனர் . எதுவாக இருந்தாலும் மூன்றாம் பிறை போல் காலம் கடந்தும் அடுத்த தலை முறையினரால் சிலாகிக்க படும் படமா இது நிச்சயம் இருக்கும். அதிலும் குறிப்பாக அனுஷ்காவின் அசிஸ்டன்ட் அக வரும் figure மிக நன்று, அனுஷ்க , அமல பாலை மீறி நம் (என்) கவனத்தை கவர்ந்ததை ஜொள்ளு என்று சொல்லவதில் தவறு இல்லை.
அம்மா வின் ஆட்சியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்றாலும், தி மு க வின் அர்ஜகங்கள் தொடராமல் தடுக்க பட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும். அனாலும் அம்மா வின் சமச்சீர் கல்வி திட்டத்தினை தடுக்கும் முயற்சியில் தனது பழைய பிடிவாதத்தை தான் மாற்றி கொள்வதாக தெரிய வில்லை . Still அடுத்த 5 வருடங்களுக்கு அம்மா தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியே . இனி கவனிக்க பட வேண்டியவர் திரு.விஜயகாந்த் . எப்படியாயினும் சமச்சீர் கல்வி போன்ற பல அல்லது சில குளறு படிகள் இந்த ஆட்சி காலத்தில் வருவது உறுதியே , அதை இவர் எதிர் கொள்வர் என்று தெரிய வில்லை. . சென்ற முறை மதுரை சென்ற பொது அஞ்ச நெஞ்சனின் சுய தம்பட்ட பலகைகள் ஒன்று கூட சிக்கவில்லை. அனல் ஆச்சர்யம் என்ன வென்றால் மதுரையில் அம்மாவின் படத்தை விட கேப்டனின் படம் தான் சுவர்களில் அதிக அளவில் தென்பட்டது .ஒரு MLA வில் இருந்து அடுத்த 5 வருடங்களை எதிர் கட்சி தலைவர் ஆனது மிக பெரிய சாதனையே . விஜயகாந்த் நேர்மையானவர், அதிர்ஷ்டக்காரர் என்பதை விட திறமை ஆனவர் என்பதே என் வாதம்(அதாவது சரக்கு உள்ளவர் )
பண்ணி ரெண்டு வருட தொடர்ந்த பழக்கத்தை இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டேன் . அது தமிழர்களின் இதய துடிப்பான குமுதம் வாங்குவது.சுவாரஸ்யமான பதிகளுடன் வந்த காலம் போய் ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா போட்டு பிழைப்பை ஓட்டும் நிலையில் உள்ளது, அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஜவகர் இன்னும் குமுதம் படிகிறார என்பது சந்தேகமே. நன் நேசித்த குமுதத்தின் உடனான எனது உறவை பற்றி விரிவாக பின் ஒரு சந்தர் பதில் பகிர ஆசை உள்ளது . பார்போம் . என்னை பொறுத்த வரை தற் சமயம் உள்ள வெகு ஜன வர பத்திர்கையில் விகடனார் நன்றாக உள்ளார் ( குமுதத்திற்கு பதிலாக நாணயம் விகடன் நன்றாக உள்ளது ஆனால்சீக்கிரமாக விற்று விடுகிறது, )
சுவாரஸ்யமான ட்வீட்ஸ் ( எல்லாமே சுட்டது, ஆனால் சுவாரஸ்யமானது )
பயங்கரவாதிகளை சித்ரவதை செய்து உண்மைகளை வரவைக்கும் சிபிஐ-ன் பிரிவில் ட்ராவிடுக்கு உயர் பதவி கொடுக்கலாம்.
திமுக எஃகு கோட்டை, எவராலும் உடைக்க முடியாது - கருணாநிதி # ஒடச்சு ஆம்ப்ளேட்டே போட்டுட்டாய்ங்க ... இன்னுமா???..!!
பத்மநாபன் என்ற பெயர் உள்ள அனைவருக்கும் கேரளா பத்மநாபா கோயில் நகைகள் சரி சமமாகபகிர்ந்து அளிக்க வேண்டும்
Dept Storeல் ஒரு நிலா பாப்பா. பக்கத்தில் போய் கைகளைக்குவித்து 'கிருஷ்ணா வந்தாச்சு' என்றேன். பயந்து ஓடிவிட்டது. இன்னும் படம் பார்க்கல போல!
எல்லார் மேலயும் கேஸ் போட்டாச்சு!ஸ்டாலின் மேல எதப் போடறதுன்னு தெரிலயாம்! ஏன் பழைய பாத்திமா பாபு கேஸ கெளறக்கூடாது! :
மனதளவில் ஐந்து வயது இருக்கும் நபரை செக்ஸில் ஈடுபடுத்தியது குற்றம் அல்லவா!? என்கிறார் சமூகசிந்தனை மிகுந்த நண்பர் ஒருவர்! #தெ.திமகன்!
நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை:ஸ்டாலின்#அட,என்ன நீங்க?இன்னுமா புரியல?சரி விடுங்க.இன்னொரு முறை செய்து காட்டுறோம்.புரியுதா பாருங்க;)