Monday, January 30, 2012

தாய் பால் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை போட்டி

"Lunch?"  ஸ்கைப்பின் னூடே கண் சிமிட்டி கேட்டான் ஷ்யாம் 
"2 Minutes . Where ?" - ஷாலினி 
"Dominos"
"S"
"lets Start"
":)"
"வீட்டை விட்டு கெளம்பும்  போது டாலடிச்ச முகம் இப்போ ஏன்  டல்  அடிச்சு போய் இருக்கு ? " வண்டியை ஸ்டாண்டை விட்டு லாவகமாக வெளியே எடுத்தவாறு கேட்டான் . "ப்ரொஜெக்ட்ல  ரெக்கொயர்மென்ட்ச மாத்திட்டாங்க , ஆனா டார்கெட் டேட் மாத்த . இன்னும் பத்து நாள் தான் இருக்கு " வெறுமையான பதில் வந்தது ஷாலினியிடம் இருந்து .
"மொத்த டீமுக்கும் தான பிரஷர் , உன் தலையில மட்டும் இடி விழுந்த மாதிரி இருக்க ". 
" நெறைய வேலை  எல்லாம் என்  மாடியுல்ல  தான் இருக்கு"
"கிளம்பலாமா  "  பதிலை  எதிர் பார்க்காமல் கியரை மாற்றினான் .

"பீசா மேல இருக்குற  மிளகை பார்த்தால் உடையாத உன் பரு  நியாபகம் வருது"  வைரமுத்துவாக  மாற குட்டி கரணம் அடித்தான் ஷ்யாம் 
"மொக்கை போடாதடா எரிச்சலா   இருக்கு"
"ரிலாக்ஸ் டியர் ப்ரொஜெக்ட முடி, ஒரு சின்ன ட்ரிப் பிளான் பண்ணுவோம் ". அவள் சுரத்து இல்லாமல் இருந்த வெள்ளை பூண்டு துண்டுகளை அப்புறபடுத்தி பர்கரை தூய்மை படுத்த  முயற்சித்தாள்  .
"வெளியேத்தியாச்சா விரோதிய ". அர்த்தம் புரியாமல் முழித்தாள்
"ஒன்னு விடாம எல்லா பூண்டையும்  பொறக்கியாசான்னு கேட்டேன்   "
"கெளம்பலாமா?" அவன் பேச்சை மாற்ற முயற்சித்தாள்
"யப்" பெப்சியால்  ஏப்பமே பதிலாய்  வந்தது அவனிடம் இருந்து 
வாசலில் எதிர்பட்ட சிறுவனிடம் புதிய ஐந்து ரூபாயை நீட்டினாள்  . ஷ்யாம் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான் "உனக்கு 'பெரிய்ய' மனசுன்னு இது வரைக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் இப்போ அந்த பையனுக்கும் தெரிஞ்சு இருக்கும் ".
"கிளுக் ... சீ போடா " ., கொஞ்சமாக டாலடிக்க ஆரம்பித்தது அவள் கன்னங்கள் 

"சரிம்மா எங்களுக்கு தெரியும் ...
நாங்க பார்த்துகிறோம் .....
பேசினதையே திரும்ப திரும்ப சொல்லாதீங்க....
வச்சிர்றேன் ...... "
ஷ்யாமின் போன் உரையாடல் போர்வையின் ஊடே புகுந்து ஷாலினியை எழுப்பிற்று 
போர்வையை விலக்காமல் கேட்டாள்
"அம்மாவா?"
"ம்"
"குழந்தையா?"
"ம்"
"ரெடி பண்ணலாமா ?"குறும்புடன் கேட்டாள்  
"நேத்து மீனாக்ஷி அம்மன் கோவில்ல என் கூட படிச்ச பாலாஜிய அவன் ஐந்து வயசு பிள்ளையோட பார்த்து இருக்காங்க . நமக்கு பிள்ளை  இல்லைங்கிறது    அவுங்களுக்கு உறுத்த ஆரம்பிச்சு இருக்கு.  அதோட போன வாரம் பொதிகைல பேட்டி கொடுத்த டாக்டர்  30 வயசுக்கு மேல பெண்களுக்கு குழந்தை பெத்துகிறதுல பல சிரமங்கள் இருக்குனு  சொன்னது  வேற இவுங்கள இன்னும் பயமுறுத்திருக்கு  . நம்ம வீடு கமிட்மென்ட் பத்தி  சொன்னா புரிஞ்சுக்கவே மட்டேங்குறங்க "சீரியஸ்  ஆக  பதில் சொன்னான் 

   ஒரு வழியாக பத்து நாட்களை ஒரு மாதமாக நீட்டித்து ப்ரொஜெக்டை முடித்தாள்.. அடுத்த சில நாட்களில் அவளுக்கு புரிந்தது ரிலீஸ்  டேட்டை போலவே அவளது மாத விடாய் நாட்களும் தள்ளி போய் இருந்தது . மருத்துவமனயில் பரிசோதித்த போது அவளது தாய்மை உறுதி செய்யப்பட்டது . இருவரும் சந்தோசத்துடன் சலனத்தையும் உணர்ந்தனர் .
"கலைச்சுடலமா?"   சாந்தமாக கேட்டான்
அதிர்ச்சியான பின்னணி  இசை எதுவும் அவள் காதுகளில் ஒலிக்கவில்லை
 "ம்" உணர்சிகளற்ற பதில் வந்தது  அவளிடமிருந்து . பிரக்னன்சி டெஸ்ட்  ரிப்போர்ட் வாங்கி டாக்டரை சந்திக்க காத்திருக்கும் போதே கருவை கலைக்க  முடிவு செய்தனர் இருவரும் .
மருந்து வாடை டாக்டரின் குளிரூட்டப்பட்ட அறையில்  அவனுக்கு  எரிச்சலையும் , அவளுக்கு முதல் முறையாக தாய்மை  உமட்டலையும் உருவாக்கியது. 
                                      "You have already crossed 32 . இப்ப முதல்  குழந்தை பெத்துகிறதே பின்னாடி சில உடல் கோளறுகள உண்டு பண்ணலாம் . இதோட  இப்போ கலைச்சா அடுத்த குழந்தை உருவாக வாய்ப்புகள் ரெம்ப  கம்மியாவும் ஆயிடும் . நீங்களே முடிவு  பண்ணிகோங்க". விருப்பம் இல்லாமல் பெற்றோர் அந்தஸ்துக்கு தயார் ஆனார்கள் .

பிரசவ சுமை சுமப்பதனால்  சுமை குறைவான ப்ராஜெக்ட்டுக்கு  மாற்றபட்டாள்  . ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நிச்சயிக்கும் வரை எல்லாம் நல்ல படியாக போய் கொண்டு இருந்தது . அப்போது அமெரிக்க வங்கிகள்  திவலால்  , பொருளாதார சரிவு என்ற சொல் மென் பொருள் வலுனர்களிடையே பரவ தொடங்கியது . 
      சிசேரியனில் நிறை பிரசவமாக நிலாவை பெற்றவள் இரண்டே மாதத்தில் வேலைக்கு திரும்ப தயாரானாள்  .
"இது வரைக்குமே 222 பேர நீக்கிட்டாங்க . வேற வழியே இல்ல ஷாலு நீ வேலைக்கு சேர்ந்தா தான் வேலைய தக்க வச்சுக்க முடியும் . எந்த செக்டார்லயுமே நிலைமை சரி இல்ல . "
"அப்போ ஸ்ரேயாவ பார்த்துக்க  ஆள் ஏற்பாடு பண்ணனுமே , உங்க அம்மாவை  கூப்பிடுவோமா ?"  குழந்தைக்கு  செர்லாக் ஊட்டி கொண்டே கேட்டாள் .
"அவுங்க உடம்பு தான் முன்ன மாதிரி இல்லையே . வெளிய தான் ஆள் தேடனும் "
"ஆமா அவுங்க வந்தா அத செய்யாத இத செய்யாத தாய் பால் தான்   குடுக்கணும்னு எதாவது வியாக்யானம்  பேசுவாங்க "
ஐயாயிரம்  சம்பளத்துக்கு  ஒரு வயதான ஆயாவை அமர்த்தி விடுப்பை நீடிக்காமல் வேலைக்கு சேர்ந்தாள்  .

குழந்தையுடன் செலவிடும் நேரமும் குறைந்தது . தாய் பாசம் அளவோடும் , தாய் பால்   இல்லாமலும்   வாழ பழகியது குழந்தை . அதன் பலனை அடுத்த சில ஆண்டுகளில் அனுபவிக்க தயார்  ஆனார்கள்  .

          ஆம் சில வருடங்களுக்கு பிறகு தன் மார்பகத்தில் கட்டி உருவாகி இருப்பது  போன்று   உணர்ந்தாள் . பரிசோதனை  செய்ததில்  அவளுக்கு மார்பக புற்று நோய் உறுதி செய்யப்பட்டது.
"எனக்கோ  என்  குடும்பத்துலையோ யாருக்கும்  புகையிலை,போதை பொருட்கள்ன்னு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதே டாக்டர்."  கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது ஷாலினிக்கு .
"இது ஆரம்ப நிலை என்பதால் பயப்பட ஒண்ணும் இல்ல . முதல் குழந்தையை முப்பது வயதுக்கு மேல் பெற்றது, குழந்தைக்கு தாய் பால் சரியாய் குடுக்காம இருந்தது . இது எல்லாம் ஒரு காரணம்  தான். நீங்க எப்போ ஏஜ் அட்டென்ட்  பண்ணிங்கன்னு  ஞாபகம்  இருக்காம்மா "
"ஒரு பன்னிரண்டு வயசு இருக்கும் டாக்டர் " பதட்டத்துடன் பதில் சொன்னால் . 
"சிக்கிரம் பூப்பு அடையும்  பெண்களுக்கும்   பிற்காலத்தில்  இந்த நோய்  வர்றதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு.பொதுவா சாராசரி அளவ விட கொஞ்சம் பெரிய அளவு மார்பகங்கள் இருக்குற பொண்ணுங்களுக்கு நோயின் முதல் அறிகுறி  அறிய  கொஞ்ச நாள் ஆகும், அதோட கட்டியின்  அளவும் கொஞ்சம் பெரிசா  இருக்கும்கிறது பொதுவான  கருத்து . அனா  உன் விசயத்துல ,  உனக்கு சராசரி அளவ விட கொஞ்சம் அதிகமா இருந்தும் நோயோட தாக்கத்த முதல்லே கண்டுபிடிச்சிட்டோம் , கட்டியோட வளர்ச்சியும் முதல் நிலையிலே இருக்கு. தாய் பால்  குடுத்தா அழகு குறையும்னு நினைத்து   நிறைய  பெண்கள்  நினைக்கிறாங்க  , ஆனா குடுக்காம இருக்குறதுனால் வர்ற இது போன்ற பிரச்னைகளால் தான் பெண்களின் அழகு குறைகிறது . "
"மார்பகத்தையே எடுக்குற அளவுக்கு எல்லாம்  போகாதே  டாக்டர் "  ஷ்யாமிடமும் பதற்றம் தொற்றி இருந்தது .
"இல்ல ,   இவ்வளவு  தூரம் எதையும் சரி வர செய்யாத நீங்க கட்டினு ஒன்னு உருவான மாதிரி உணர்ந்தப்பவே வந்து இருக்கீங்க . அது நாலு சென்டிமீட்டர்குள்ள இருக்குறதுனால நாம அத கதிர் இயக்க சிகிச்சை முலம் நீக்கி மார்பகத்த மறு வடிவமைப்பு பண்ணலாம். இது கொஞ்ச நீண்ட நாள் சிகிச்சை. அதனால நோயாளிக்கு சோர்ந்து போகாம தைரியமா , தன்னம்பிக்கையோட போராட  பழகணும்  .பொதுவாவே முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறை மார்பக புற்று நோய்  இருக்கான்னு பரிசோதனை செஞ்சுகிறது , ஆரம்ப நிலையிலே நோயை கண்டறிய உதவும். "
"கண்டிப்பா டாக்டர் "   இருவரும்  ஒன்றாக கூறினர் , உறுதியுடன் .  இங்கே நடப்பவை பற்றி எந்த கவலையும் இல்லாமல் டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பை வைத்து விளையாடி  கொண்டு இருந்தாள் ஸ்ரேயா . 






Sunday, January 15, 2012

சில நிகழவுகள் சிற் சில பகிர்வுகள் :4 (15/01/2012)


நண்பன் : 
   நேற்று தான் பெங்களூர் ஊர்வசி தியேட்டர்ல பார்த்தேன் . வியாழன் காலைல கார்கி படம் அட்டகாசம்னு சொன்னதுல இருந்தே ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருந்து . 3 idiots ஏற்கனவே 2 தடவை பார்த்தது நாலா ட்விஸ்ட் எதுவும் சுவாரசியமா இல்ல , ஆனாலும் விஜய், ஷங்கர் காக பார்க்கணும்னு தோனுச்சு. சீன் பி சீன் ஷங்கர் அப்படியே எடுத்து இருக்காரு, பாட்ட தவிர . போக்கிரி வந்தப்போ எல்லாரும் விஜய் மகேஷ்பாபுவ அப்படியே காபி அடிச்சு நடிச்சு இருக்காருன்னு சொன்னங்க , அதுக்காகவே அமிரோட பாதிப்பு இல்லாம நடிச்சு இருக்காரு . படத்தோட டைட்டில் கீ  போர்ட்ல இருக்குற ஸ்பெஷல் கேரக்டர்ஸ வச்சே டிசைன் பண்ணி இருக்காங்க . நண்பனோட கேரக்டர் ரெம்ப ஸ்பெஷல் நு சிம்போலிக்கா சொல்லுரன்களோ .

                  விஜயோட சேர்த்து சத்யனும் , ஜீவாவும் கலக்கி இருந்தாங்க . ஆசிரியர் தின மேடைல சத்யன் கொடுக்குற மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற பேச்சுக்கு தியேட்டர் ல  நல்ல வரவேற்பு .  கார்கி   சிறந்த பாடல் ஆசிரியர் மட்டும் இல்ல நல்ல வசனகர்தாணு நிருபிச்ச படம் .மனுஷன் அண்ணா பலகலை கழகத்துல வேலை பார்த்து கிட்டே, பாட்டும் எழுதி , சாப்ட்வேர் கம்பனியும் நடத்தி , இப்போ வசனமும் எழுத அரம்பிசுடறு . சுஜாதாவுக்கு பிறகு பல துறைகளில் தடம்  பதித்து    பெற வாய்ப்பு உள்ளவர்  என்றே தோன்றுகின்றது . கார்கி வசனங்கள்ல கூட சுஜாதா வோட பாதிப்பு சில இடங்களில் இருந்துச்சு . இனி மணிரத்னமும் கர்கியவே பயன் படுத்திக்கலாம் , இளைஞர் கள் நாடி துடிப்பு தெரிஞ்சு வசனம் எழுதி இருக்காரு . உதாரணம் : கக்கா  போறதா டவுன்லோட் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லுறது , நீ குசு போட்டே ஒசான் ல ஓட்டை விழுந்திடுசுனு சொலுறது .

                    ஆளும்கட்சி பிரஷர் ல விஜய படத்த விட்டே நீக்கிட்டாங்க , சூர்யா நடிகிறாரு நு நெறைய வதந்தி. எல்லாத்தையும் மீறி மொத டீமும் ஜெயுச்சு இருகாங்க . வழக்கம் போல நம்ம கேபிள் அண்ணனுக்கு மட்டும் பூத கண்ணாடி வச்சு விஜய் படத்துல  இருக்குற குறைகள கண்டுபிடிசுறாரு .இவராவது பரவாயில்ல  , ஜாக்கி, விஜய் படத்துக்கு விமர்சனமே எழுத மட்டாரு. ரீமேக் படம், விஜய் படத்துல எல்லார் கிட்டயும் அடி வாங்குறாரு ,ஜீவா அக்டிங் சூப்பர் இப்படி சொல்லியே அஜித் ரசிகர்கள் மனச தேத்துகிரங்க .  வேட்டை நல்ல இலைன்னு வர்ற விமர்சனம்களும் நண்பனுக்கும் பெரிய பிளஸ் . நண்பன தெலுங்குல டப் பண்ணி ரிலீஸ் பண்ணறாங்க . விஜய்க்கு அந்திரவுலையும்  நல்ல ஓபனிங் கிடைக்கும்னு நம்பலாம் . தெலுங்குல நிலையான மார்கெட்ட பிடிகிரதுக்காகவே ஷங்கர்,முருகதாஸ் , கௌதம் மேனன்  படத்துல நடிக ஒத்து கிட்டரு போல தளபதி .
நல்ல நண்பன் - எல்லாம் நலமா  இருந்தும் இந்த மாதிரி விமர்சனம்கல தவிர்க்க முடியாது தான் http://www.cineclouds.com/2012/01/blog-post_14.html.எல்லாம் விஜயோட முன் வினை (குருவி , சுறா e.t.c)


இது அஜித் ரசிகர்கள் காக :


சொந்தம்கிறது தங்கம் மாதிரி 

தங்கம்கிறது அனுஷ்க மாதிரியா ?


மிச்சத பார்காம  மச்சத பார்த்தவங்க மச்சகரங்க !!




எங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு நாங்க போட்ட கோலம்  , ராத்திரி ஏழு மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு பதினோரு மணிக்கு முடிச்சோம் 


சுவாரஸ்யமான   சுட்ட ட்வீட்ஸ் :

கிளார்க்:எண்ணி மூனே நாளில் உங்களை முடிக்குறோம்
டோனி:ஹ ஹா கண்ணா அங்கே பாரு எண்ணி மூனே நிமிஷத்துல நாங்களே முடிசிக்குறோம்

பொங்கல் பொங்கினா அதில் கொஞ்சம் மிக்சரை அள்ளிபோடுங்க பொங்காது#கேப்டனின் பொங்கல் வாழ்த்துசெய்தி

டேய் தோனி &கோ பசங்களா!! ஆடாம ஜெயிக்க நீங்க அஜித்& கோ இல்லை.. ஒழுங்கா ஆடுங்க

தாவணில அமலாபால்.... #செம வேட்டை

சிட்டியில் இருப்போர் சப்பிப்போட்ட பனங்கொட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை - நண்பனில் இலியானாவை பாருங்கள்.
வெளங்கிடும்.. அடுத்தது கென்யா'வையோ, நமீபியா'வையோ கூப்ட்டு ஒரு வெளுவெளுத்தாத்தான் என் மனசு ஆறும் :-(((
இந்த போகி பொங்கலுக்காவது நீயா? நானா? கோபிநாத் தனது பழைய கோட்டுசூட்டுகளை தீவைத்து கொளுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.!
சென்னையில் புகைமூட்டம். விமானங்கள் ரத்து #தல ரசிகர்கள்,வயிற்றெரிச்சலை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆ.விகடன்: ''மிஸ் பண்ணிட்டோமே... நாம நடிச்சிருக்கலாமே’னு நீங்க நினைச்ச படம் எது?'' 
பவர்ஸ்டார்: ''எந்திரன்!''
ஆண்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு; வீட்டு வாசப்படி தான் அது, வெளிய வந்துட்டா நாம சிங்கம்ல.!!! :)
கடைக்கு அடிக்கடி அனுப்பறதுக்காகவே வீட்ல கடைசியா பிறந்தவங்களை கடைக்குட்டி னு கூப்பிடறாங்க போல..! 


இது நான் எழுதும் ஆர்வத்தில் எடுத்த முயற்சி, பிழைகள் இருந்தால் பொருது அருள்க. வாசித்தமைக்கு மிக்க நன்றி.பிடித்து இருந்தால் udanz, Indli யில்  வாக்களிக்கவும்