Monday, August 15, 2011

சில நிகழவுகள் சிற் சில பகிர்வுகள் :1 (14/08/2011)


பெங்களுரு நகரின் அமைதியான சாலைகளை , பின்னல் நின்று முண்டி அடிக்காமல் உணவகங்களில் உன்ன விரும்புபவர்கள் , இன்ன பிற விசயங்களை ரசிக்க விரும்பும் அமைதி பிரியர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. மூன்று நாட்கள் விடுமுறையை ஒட்டி நெரிசல் இல்ல அமைதி தொழில் நுட்ப பூங்காவாக மாறி இருக்கின்றது. சிறிய இடைவேளைக்கு பிறகு வந்து இருக்கும் விடுமுறை என்பதால் பெரும்பான்மையானோர் சொந்த ஊர் பயணம் மேற் கொண்டு இருப்பார்கள் போலும்.

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் தொடர்ச்சியாக அங்குள்ள இளைஞ்சர்களின் கோபம் அங்கு உள்ள மென் பொருள் தொழில் நிறுவனங்களின் பக்கம் திரும்பி உள்ளது . இன்றைய நிலவரப்படி ஆறில் ஒரு அமெரிக்கர் வேலை இல்லாமல் இருபதாக ஓர் புள்ளி விவரம் கூறுகின்றது . அங்குள்ள இளைஞ்சர்கள் தாங்கள் நாட்டின் பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு இவ்வளவு நாட்களாக  கொடுத்த வேலைகளை , இனி தமக்கே தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிடம் வேலையை பகிரா விட்டால் , ஏற்படும் அதிக படியான செலவினங்களை சமாளிக்க வேண்டும்,  பகிர்ந்தால் உள்ளூர் எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் தவிக்கின்றன நிறுவனங்கள். 
துணுக்கு : தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் கையிருப்பை விட ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள கையிருப்பு அதிகம் .சென்ற ஆ.தி.மு.க  ஆட்சியில் அரசங்கமே போட்ட மேம்பால ஊழல் வழக்குகள் மக்களிடம் இது ஒரு பழிவாங்கும் செயல் என்கிற எண்ணத்தை உருவகியதல் இந்த முறை மக்களிடமே குற்ற அதரங்களை திரட்டும் புதிய முறை செம்ம ஹிட்டு . இவை அனைத்தும் பலி வாங்கும் செயல்கள் என்றாலும் ஒரு சில வழக்கள் மட்டுமே ஜோடிக்க பட்டவை மற்ற அனைத்தும் பொது மக்களிடம் புகார்களாக பெற பட்டு , அதன் மீதே நடவடிக்கைகள் எடுக்க படுகின்றன . எதிர் கட்சி என்கிற அந்தஸ்தை பறி கொடுத்து , அழும் கட்சியை பற்றி விமர்சிக்க முடியாமல் , ஒவ்வொரு ஊரின் சிறைச்சாலைகளுக்கு விசிட் அடித்து கொண்டு இருகின்ரார  தளபதி .
துணுக்கு : ஆடி அடங்கும் வாழ்க்கை.....................மங்கத்தவில்  அஜித்தின் நரைத்த முடி கெட்டப் அட்டகாசம் . திரைலோரில் வரும் பின்னணி இசை ஈர்த்த அளவிற்கு , பாடல்களில் ஏதும் ஸ்பெஷல் இல்லை, பில்லாவை விட ஒரு படி மேலே இருக்கிறது தீம் மியூசிக்."நானும் எவ்வளவு  நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது !" பைனல் டச்  டயலாக்  சூப்பர் . இதையே பரிசல் கொஞ்சம் மாத்தி இப்படி ட்வீட் பண்ணி ருக்கரு "நானும் எவ்ளோநாள்தான் நம்பர் ஒன் -னாவே இருக்கறது? #தோனிடா". ஒன்றரை வருடங்கள் கழித்து வரும் அஜித்தின் 50 படம் என்பதால் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு நிகழ்கிறது   .வரலாறுக்கு பிறகு ஒரு நேர்மையான ஹிட்  அஜித்துக்கு இல்லை  . பில்லா மெகா  ஹிட் என்றாலும் படம்  பெரிதா ஈர்க்க வில்லை.  அஜித்  படம் மட்டும் எவ்வளவு  மொக்கைய  இருந்தாலும் ஆஹா ஓகோனு இருக்குனு மௌத் டாக் குடுகுரதுக்குனே  ஒரு பெரிய கூட்டம் இருக்கு .  அடுத்த வாரம் மங்கதா படம் வெளியாகும் தேதி அறிவிக்க பட உள்ளது . நம்ம வலை உலகத்துலே கூட ஏகன் வந்தப்ப அமைதியா இருந்துட்டு வில்லு வந்தப்ப பய புள்ளைங்க கிளி கிளின்னு கிளுசுட்டாங்க. ஆனா நம்ம தளபதி அதுக்கெல்லாம் அஞ்சாம மறுபடியும் சுறா கொடுத்தது தனி கதை .ALL THE BEST VINAYAK .துணுக்கு :இதுக்கு இடையில்  மதுரைல போலீஸ் மங்கதா போஸ்டர கிளிசுட்டங்கனு தயாநிதி தனிய கூவி கிட்டு இருக்காரு ( என்ன ஆட்டம் பொட்டீங்க டா)
  மங்கதா ட்வீட்ஸ் :
பில்லா படத்துல மாட்டின கோட்டை இன்னுமா கழட்டல..! #மங்காத்தா டிரைலர்
த‌ல‌க்கு கொஞ்ச‌ம் தொப்பை இருக்குன்னு விநாய‌க்னு பேரு வ‌ச்சான் பாரு வெங்க‌ட்டு.. அவ‌ந்தான்யா பின்ந‌வீன‌த்துவ‌வாதி
ரெட்டுக்கு மொட்டை அடிச்ச‌ ப‌ய‌லுங்க‌ எல்லாம் சுண்ணாம்பு வாங்க‌ க‌டைக்கு போயிருக்காங்க‌ளா இல்லையா?
த‌ல‌ ம‌ன‌சும் ம‌யிறும் மாதிரிதான்.. அட‌ வெள்ளைன்னு சொன்ன‌ன்ப்பா
ரிமோட் கார், ஏரோப்ளேன் விற்பனை மையத்தை தொடங்கி கல்லா கட்டலாம் #அஜிதப்டேர்மங்காத
இனி படம் ரிலீசாகி ரத்தக்கண்ணீருடன்வெளிய வர்ற வரைக்கும் மங்காத்தா ஃபீவர் தானா! அழகிரி பையனுக்கும் ஒரு ஆப்படிப்போம்!"
மங்காத்தா படத்தில் அஜித்துடன் அஜித்தின் பெரியப்பாவும் சிலப்பல காட்சிகளில் நடித்திருப்பது தெரிகிறது
மங்காத்தா டிரைலர் பார்த்து ராசா விழுந்து விழுந்து சிரித்தார். ஐநூறு கோடி அடிக்கறதுக்காடா இவ்வளவு பில்டப்பு :)
மற்ற சுவாரஸ்யமான   சுட்ட ட்வீட்ஸ் :
படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த முறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய,குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி ”லாட்டரி மார்ட்டின்” !!!
ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ
தன் படத்துல வில்லனுக்கு ஃப்ளட்சர்-ன்னு பேர் வெச்ச கமல் ஒரு தீர்க்கதரிசி! #INDIAN CRICKET COACH
உனக்குதான் ராக்கி கட்டினாங்க என்று எகத்தாளம் செய்வோருக்கு, செந்தில் கவுண்டர் காமெடி தெரியுமா? இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலைன்னா... ஹிஹிஹி
தங்கபாலுவை திமுகவினர் வளைத்த போட்டதற்காகவும் நில அபகரிப்பு வழக்கு போடலாம். 4 கிரவுண்டாம்.
சுதந்திர தினத்தன்று டாஸ்மாக்குகள் விடுமுறை என்பதால் குடிமகன்கள் இப்போதே ஸ்டாக் பண்ண தொடங்கிவிட்டனர். #திட்டமிட்ட வாழ்வே தெவிட்டாத இன்பம்
1,76000 கோடி சேர்ந்து பெண்மையான‌தோ. என்னுட‌ன்‌ சிறைக்கு வ‌ந்து புன்ன‌கை செய்ய‌ க‌ண் கூசுதோ - ராசா பாட‌ல்
த‌ம் குடும்ப‌த்தை நினைத்திட‌ ம‌ற‌ந்தார்.. ந‌ம் க‌ழ‌க‌த்தை வ‌ள‌ர்த்திட‌ முனைந்தார் - திமுக‌ பாட‌ல். #ஹாஹாஹாஹா.. முடிய‌ல‌டா முடிய‌ல‌
வளையோசை... கலகலகலவென கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது #வெள்ளிக்கிழமை மட்டும் ஆபிசிற்கு பஸ்ஸில் செல்லலாம் என இருக்கிறேன்
எந்த சீரியல் பார்த்தாலும் அலுகுறவ பொம்பள
எந்த சரக்க பார்த்தாலும் அடிகிரவன் ஆம்பளை...... #நான் ஆம்பளை
க‌ல்யாண‌த்துக்கு பிற‌கு காத‌லிக்க‌றீங்க‌ளா என‌ கேட்கும் பெண்க‌ளுக்கு "வீடே வாங்கியாச்சு.. இன்னும் ஏன் வாட‌கை ப‌த்தி பேசுற‌" #boring
இந்தியா வ‌ல்ல‌ர‌சாக‌ வேண்டும். முடியாத‌ப‌ட்ச‌த்தில் வாஞ்சிநாத‌னாகவேனும் ஆக‌ வேண்டும்.
பாஸ் முன்னாடி எல்லாம் நம்மளை கேஸ் போட்டு கைது பண்ணுவாங்க இப்போ கைது பண்ணிட்டு கேஸ் போடுறாங்க #அறிவாலயத்தில் கேட்கும் குரல்கள்
தேசியமலர் - தாமரை, தேசிய விலங்கு - புலி, தேசிய மரம் - ஆலமரம், தேசியக் கனி:- மாம்பழம். தேசிய பொம்மை - மன்மோகன்!
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..//
எக்செல் சீட்டையே வெறித்துக் கொண்டிருக்கிறார் என் பாஸ்.நாம் மாற்றாதவரை அதில் எதுவும் மாறாது என அவருக்கு தெரியவில்லை பாவம்..
மனைவியை பிரிய அர்னால்ட் முடிவு.! #பாருங்கய்யா அவ்ளோ பெரிய பலசாலி, அவராலயே முடியல. சொம்மா எங்ககிட்ட வந்துக்கிட்டு.!!
சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே....
'இவ்ளோ பெரிய மேடையை எனக்கு குடுத்த அக்காக்கு தேங்க்ஸ்' டேய்.... மண்டபத்துக்காரனுக்கு தெரிஞ்சா கிழிச்சுடுவாண்டா. #மானாட மயிலாட
பெண்களின் கைகள் ஒரு சேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ அருகிலிருக்கும் பெண் தேர்வு செய்யும் சேலையில்தான்.
அனுஷ்கா ஸ்பெஷல் :"அனுஷ்காவின் நிஜப் பெயர் ஸ்வீட்டியாம்!சில பேருக்குத் தான் பெயர்கள் எவ்வளவு பொருத்தமாய் அமைந்து விடுகின்றன!"
புவி வெப்ப‌மாவ‌தை சுட்டிக்காட்டி இனி அனுஷ்காக்க‌ளை ப‌டைக்க‌ வேண்டாமென‌ பிர‌ம்ம‌ன்னிட‌ம் ம‌னு கொடுத்தால் என்ன‌???
அம்மி மிதிச்சு அருந்த‌தீயை நேரில் காட்டுவார்க‌ள் என்றால் இளைஞ்சர்கள் இன்றே திரும‌ண‌த்திற்கு த‌யார் #அனுஷ்காஃபீவ‌ர்
இளைஞ‌ர்க‌ளிடையே புர‌ட்சியை ஏற்ப‌டுத்திய‌தாலும், கால‌த்தை வென்ற‌ அழ‌கி என்ப‌தாலும் அனுஷ்காவிற்கு செவ்வ‌ழ‌கி என்ற‌ ப‌ட்ட‌ம் த‌ர‌லாம்
காஜ‌ல் டீஷ‌ர்ட்டிலும், அம‌லாபால் தாவ‌ணியிலும், சுனைனா ஸ்லீவ்லெஸ்ஸிலும், அனுஷ்கா எல்லா உடையிலும் அழ‌காக‌ இருக்கிறார்க‌ள் #ஆராய்ச்சி
இந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்க முடியுதானு :
 
இந்த வார வீடியோ : 

துணுக்கு 1: தெய்வ திருமகள் வசூல் காஞ்சனாவ விட கம்மியம் .
துணுக்கு 2:எங்க ஆபீஸ்ல கன்னட காரங்க நெறைய பேரு இந்த பின்னணி இசைய தான் அழைப்பு ஒலி யா (Ring Tone) வச்சு இருக்காங்க 

 கடி ஜோக் :
"கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."

இந்த பதிவு புடிச்சவுங்க மட்டும் இல்ல படிச்சவிங்களும்  ஒட்டு போடலாம் . தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் குறிப்பிடவும் . வருகைக்கு நன்றி .

1 comment:

Anonymous said...

முதல் விஜயம்..ரசித்தேன்...
இன்றிலிருந்து தொடர்கிறேன்...